ஓடிடி தளத்தில் வெளியாகும் விமல் நடித்த விலங்கு: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ5 ஓடிடி தளத்தில் ஏற்கனவே பல பொழுதுபோக்கான, தரமான திரைப்படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் "விலங்கு" என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.
ஃபிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகவுள்ள 7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது. இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதில் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடர்.
விலங்கு தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்குனர் - G.துரைராஜ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments