'ஆக்சன்' என்று சொல்லிவிட்டால் உடனே புயலாக மாறி விடுவார்: 'லியோ' விஜய் குறித்து வில்லன் நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு சில நாட்களுக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர்களில் ஒருவர் பாபு ஆண்டனி. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கும் அவர், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் எடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவலில் இருக்கும் என்றும் இது ஒரு புது முயற்சியான படம் என்றும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் என்றும் தெரிவித்தார்
மேலும் விஜய், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய மூவருடனும் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் இருப்பதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். மேலும் விஜய் செட்டில் பொதுவாக அமைதியாக இருப்பார், ஆனால் இயக்குனர் ஆக்சன் என்று இயக்குனர் சொல்லிவிட்டால் வேற லெவலில் புயலாக மாறி விடுவார் என்றும் கூறினார்.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout