விஜய்யால் பல பட வாய்ப்புகளை இழந்தேன்: விக்ராந்த் அளித்த அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகிய இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்ற நிலையில் விஜய்யால் தான் கடந்த 17 ஆண்டுகளில் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியபோது, ‘தனக்கு வாய்ப்பு கொடுக்க வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சில நிபந்தனைகளை விதிப்பார்கள். குறிப்பாக விஜய் அவர்களை என்னுடைய படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க வேண்டும், இசை வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்து வரவேண்டும், ஒரு காட்சியில் விஜய்யை நடிக்க வைக்க அழைத்து வேண்டும், அல்லது இசை வெளியீட்டு விழாவில் அவர் வந்து பேச வேண்டும், ஒரு பாடல் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும், குறைந்தபட்சம் நம்முடைய படத்தைப் பற்றி ஒரு ட்விட்டாவது விஜய் செய்ய வேண்டும் என்று பல நிபந்தனை விதிப்பார்கள்,
இவ்வாறு நிபந்தனை விதித்து வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் நான் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் முடியாது என்று சொல்லிவிடுவேன். அதனால்தான் நான் பல வாய்ப்புகளை இழந்தேன். தனிப்பட்ட முறையில் விஜய் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார், அவரிடம் மேலும் மேலும் எனக்கு உதவி கேட்க விருப்பமில்லை’ என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து விக்ராந்த் கூறியபோது, ‘ஜேசன் சஞ்சய் மிகவும் மென்மையானவர், மரியாதைக்குரியவர், அப்படித்தான் அவரை விஜய் மற்றும் சங்கீதா வளர்த்தார்கள், சஞ்சய்க்கு நிறைய கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அவரது இயல்புக்கு நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் ’என்று தெரிவித்துள்ளார். கடைசியாக விஜய்யின் அரசியல் வருகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com