close
Choose your channels

விக்ராந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Tuesday, August 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ராந்த் தற்போது 'வெண்ணிலா கபடிக்குழு 2' மற்றும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'பக்ரீத்'. உலகம் முழுவதும் நாளை இஸ்லாமிய சகோதரர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது நல்ல பொருத்தமாக கருதப்படுகிறது.

ஜெகதீசன்பாபு இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் படத்தொகுப்பாளராக ரூபனும், கலை இயக்குனராக மதனும், ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment