நடிகர் விக்ராந்துக்கு உதவி செய்த விஜய் சேதுபதி.. கலக்கலான போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த கலக்கலான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் விக்ராந்த் என்பதும் இவர் 'கற்க கசடற’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி, அதன் பின்னர் ’நெஞ்சத்தை கிள்ளாதே’ ’கோரிப்பாளையம்’ ’சட்டப்படி குற்றம்’ ’பாண்டியநாடு’ ’கவண்’ ’சுட்டு பிடிக்க ஆசை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ’லால் சலாம் ’திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ‘தி கில்லர் மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘வில் அம்பு’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Launching the first look of #TheKillerMan, My best wishes to @vikranth_offl, @iYogiBabu & the entire team.
— VijaySethupathi (@VijaySethuOffl) September 7, 2024
Production : @cinemasbigbang
@Pavithrah_10 @SPVelumanicbe @ramesh_dir @inigo_prabhakar @MippuSamy #Kumar_Natarajan #DOP_KK @composerbala @Gopikri_edit @JBSVision… pic.twitter.com/pLckcjOi6A
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com