சீயான் விக்ரமின் மாப்பிள்ளை கருணாநிதிக்கு சொந்தமா? புதிய தகவல்

  • IndiaGlitz, [Monday,June 27 2016]

பிரபல நடிகர் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவின் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மகள் அக்ஷிதாவுக்கு விக்ரம் பார்த்த மாப்பிள்ளை சிகே பேக்கரின் குரூப் திரு நங்கநாதன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மானு ரஞ்சித் என்பதையும் நேற்று பார்த்தோம்.

இந்நிலையில் மணமகன் மானு ரஞ்சித் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கருணாநிதி மகன் மு.க.முத்துவின் மகள்வயிற்று பேரன் தான் மானு ரஞ்சித் என்றும் கருணாநிதிக்கு இவர் கொள்ளுப்பேரன் உறவு என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

24 வருட விஜய்யின் திரையுலக வரலாற்றில் 'தெறி' செய்த முதல் சாதனை

இளையதளபதி விஜய் திரையுலகிற்கு வந்த இந்த 24 வருடங்களில் சமீபத்தில் வெளியான 'தெறி' திரைப்படம்தான் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது...

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' குறித்த தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் 'சபாஷ் நாயுடு'...

'கபாலி' சென்சார் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பாரப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது...

'கபாலி'யின் 3வது டீசர் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் முதல் டீசர் கடந்த மே 1ஆம் தேதியும், 2வது டீசர் கடந்த 16ஆம் தேதியும்...

சிம்புவின் மூன்றில் ஒன்று ரிலீஸ். ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அவர் மூன்று வித்தியாசமான வேடங்களில்...