விக்ரமனை பிராங்க் செய்த குயின்ஸி.. என்ன நடக்குது இங்கே?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பிராங்க் காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களுக்கு சுவராசியமாக உள்ளது.
குறிப்பாக வேறு எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சக போட்டியாளர்களை பிராங்க் செய்வது அதிகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனின் வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமனையே சில போட்டியாளர்கள் சேர்ந்து பிராங்க் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
குயின்ஸியை குழந்தை என்றும் அமுதவாணன் கூறியதை அடுத்து அது குறித்து விக்ரம் கமெண்ட் அடித்துள்ளார். இதையடுத்து குவின்ஸி தன்னை குழந்தை என கிண்டல் செய்கிறார்கள் என்று கதறி அழ, நிவாஷினி அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
இந்த நிலையில் ஆயிஷா இந்த பிரச்சனையை கையில் எடுத்து விக்ரமன் மற்றும் அமுதவாணனிடம் வாதிடுகிறார். எப்படி குயின்ஸியை நீங்கள் குழந்தை என்று சொல்வீர்கள் என்றும் அவர் கூறுகிறார். அதற்கு விக்ரமன், ‘நான் குயின்ஸியை குழந்தை என்று சொல்லவில்லை, அமுதவாணன் தான் கூறினார் என்று கூற ஆயிஷா அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார்.
இந்த நிலையில் திடீரென ஆயிஷா, குயின்ஸி, நிவாஷினி சிரிக்க அதன் பின்னர் அது பிராங்க் என்பது தெரியவந்தது. விக்ரமனுகு அதன் பின்னர் தான் நிம்மதி ஏற்பட்டது. மூவரும் சேர்ந்து விக்கிரமனை பிராங்க் செய்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் இன்னும் என்னென்ன பிராங்குகள் வரும் இன்னும் என்னென்ன நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Vikraman #Ayesha and #Queency Prank ??????#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/i3aWcKXNI6
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments