கதறி அழும் விக்ரமன்... என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடை இருக்கும் நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் விக்ரமன் கதறி அழும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கடந்த 100 நாட்களில் விக்ரமனை இதுவரை ஒரு வலுவான போட்டியாளராகத்தான் அனைவரும் பார்த்து வருகிறோம். எவ்வளவு சோதனை வந்தாலும், அதை தைரியமாக எதிர்த்து போராடும் ஒரு போட்டியாளராகத்தான் பார்த்திருக்கின்றேமே தவிர, எந்த இடத்திலும் அவர் கண்கலங்கவில்லை.
அப்படிப்பட்ட விக்ரமன் திடீரென கதறி அழுகும் வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு மிகவும் நெருக்கமான போட்டியாளராக இருந்தவர்களில் ஒருவர் அமுதவாணன். அவ்வப்போது அவரிடம் தான் விக்ரமன் மனம்விட்டு பேசுவார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் அமுதவாணன் கடைசி நேரத்தில் திடீரென ரூ.11.75 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வீட்டை விட்டு வெளியே செல்ல போகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் விக்ரமன் தன்னையும் அறியாமல் உடைந்து அழுகிறார். அவருக்கு அமுதவாணனே எப்படி ஆறுதல் கூறுவது என திகைத்து போய் உள்ளார். சக போட்டியாளர்கள் விக்ரமனுக்கு ஆறுதல் கூறி தேற்றுகின்றனர். ஒரு உண்மையான நட்பு இந்த கண்ணீரின் மூலம் வெளிப்படுவதாக இந்த வீடியோவுக்கு பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
#Vikraman breaks for the first time in his #BiggBoss journey. It's really heart wrenching to see him cry!💔💔💔
— Derrida_Barthes (@derrida_barthes) January 20, 2023
All the best #Amudhavanan for your future prospects!❤️#WinnerVikraman #AramVellum#VoteForVikraman #AbuserAzeem #BiggBossTamil6#BiggBossTamil pic.twitter.com/2Bv6cEwF3h
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments