மகேஸ்வரியுடன் விக்ரமன் நடனம்.. இதுதான் அந்த தண்டனையா பிக்பாஸ்?

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் சீரியஸான சண்டை போட்டுக் கொண்டாலும் சில காமெடி மட்டும் ரொமான்ஸ் காட்சிகளும் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விக்ரமனுக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்க முடிவு செய்த பிக்பாஸ் அவர் மகேஸ்வரியுடன் ரொமான்ஸ் பாடல்களுக்கு டான்ஸ் ஆட வேண்டும் என்று கூறுகிறார்.

இதனையடுத்து விக்ரமன் மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் டான்ஸ் ஆட சக போட்டியாளர்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியாளர்கள் பாடும் பாடல்களுக்கு ஏற்ப விக்ரமன் மற்றும் மகேஸ்வரி நடனமாடிய காட்சிகள் சுவராசியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரமன் மற்றும் மகேஸ்வரி இருவரும் காரசாரமாக மோதிக்கொண்ட நிலையில் தற்போது இருவரும் ரொமான்ஸ் நடனமாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.