தனலட்சுமி குறித்து விக்ரமன்: ஆனால் தனா என்ன செய்றார் பாருங்க..

  • IndiaGlitz, [Wednesday,January 18 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி குறித்து விக்ரமன் பெருமையாக கூறும் நிலையில் விக்ரமனை பற்றி அவதூறாய் ஜிபி முத்து பேசும்போது தனலட்சுமி அதை ஆமோதிப்பது போல் சிரித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் நிலையில் தற்போது வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விருந்தினர்களாக உள்ளே சென்றதையே மறந்துவிட்டு ஒருசில போட்டியாளர்கள் மீண்டும் சண்டை போட்டு வருவது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தனலட்சுமி குறித்து மகேஸ்வரி மற்றும் விக்ரமன் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. அதில் மகேஸ்வரி ’தனலட்சுமி தனக்காகத்தான் ஆவேசம் அடைந்தார் என்பதை தவிர அவர் பிறரை கீழே போட்டு தான் மேலே வர வேண்டும் என்று எண்ணியதே இல்லை, ஒரு முறை கூட அவர் யாரையும் தப்பாக பேசி நான் பார்த்ததில்லை’ என்றும் கூறினார்.

அதை ஆமோதித்த விக்ரமன் ’தனலட்சுமிக்கு ஒரு சில குறைகள் ஆரம்பத்தில் இருந்தாலும் அதன் பின்னர் அவர் தேறி விட்டார் என்றும் அவர் கொஞ்சம் ஆணவமாக இருந்தாலும் அடுத்தவரை மட்டம் தாழ்த்தி இதுவரை பேசியதே இல்லை என்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்தார்.

விக்ரமன் மற்றும் மகேஸ்வரி இவ்வாறு தனலட்சுமி குறித்து பெருமையாக பேசிய நிலையில், ‘விக்ரமனை ஜிபி முத்து அவதூறாக பேசியபோது அதைக் கேட்டு தனலட்சுமி சிரித்தது பெரும் ஆச்சரியத்தை அழைத்துள்ளது. ஜிபி முத்து தான் ஒரு இன்டர்வியூ கொடுத்ததாகவும் அதில் இரண்டு பாயிண்ட்டுகள் சொன்னதாகவும், ஒன்று அசீம் சண்டை போடுவதை தடுப்பார், ஆனால் விக்ரமன் முடிந்த சண்டையை கிளப்பி விடுவார் என்று கூறினார். விக்ரமன் குறித்து ஜிபி முத்து இவ்வாறு கூறிய போது தனலட்சுமி அதை ஆமோதிப்பது போல் சிரித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

விக்ரமன் என்கிட்ட வரமாட்டார், ஏன்னா அவருக்கு பயம்: ஜிபி முத்து

விக்ரமன் என்கிட்ட வர மாட்டார், அவருக்கு என் மீது பயம் என ஜிபி முத்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் படத்திற்காக சிரஞ்சீவி செய்த தியாகம்.. வைரல் புகைப்படம்!

அஜித் படத்தின் ரீமேக் படத்திற்காக சிரஞ்சீவி செய்த கெட்டப் மாற்றம் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய்சேதுபதியுடன் மோதும் ஆர்ஜே பாலாஜி.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஆர்ஜே பாலாஜி நடித்த 'ரன் பேபி ரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணமூட்டையில் இருந்த 3 லட்சம் மட்டுமல்ல.. பெரிய தொகையை தட்டி தூக்கிய பிக்பாஸ் போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பணமூட்டை அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் ஆரம்பகட்ட விலையான மூன்று லட்சம் என்ற பணமூட்டையை எடுத்துக் கொண்டு செல்லும் போட்டியாளர் யாராக இருக்கும்

இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நீங்க ஜீரோ.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுப்பாரா விக்னேஷ் சிவன்?

அஜித்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கு கமெண்ட் அளித்த ரசிகர் ஒருவர் இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நீங்க ஜீரோ' என சவால்