தளபதி விஜய் வீட்டிற்கு திடீரென சென்ற விக்ரமன் - கே.எஸ்.ரவிகுமார்.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் வீட்டிற்கு இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் சென்று சந்தித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமன் என்பதும் அதேபோல் விஜய் நடித்த ’மின்சார கண்ணா’ என்ற படத்தை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் விக்ரமன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் ஆகிய இருவரும் சமீபத்தில் தளபதி விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடித்த ’ஹிட்லிஸ்ட்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சூரிய கதிர் இயக்கிய இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கௌதம் மேனன், சமுத்திரகனி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் சமீபத்தில் விக்ரமன் அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் விஜய்யை சந்தித்து ’ஹிட்லிஸ்ட்’ படத்தின் ட்ரைலரை காண்பித்தனர்.
இந்த டிரைலரை பார்த்த விஜய் பட குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Team #Hitlist met #ThalapathyVIJAY and got his blessings at #TheGreatestOfAllTime Spot. pic.twitter.com/SZQV1vElPd
— Actor Vijay Fans (@Actor_Vijay) May 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments