சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் சீயான் விக்ரம்

  • IndiaGlitz, [Monday,January 04 2016]

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சீயான் விக்ரம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மையுடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர்களின் பிரியமான நடிகராக விளங்கி வரும் விக்ரம் இந்த வருடம் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


ஏற்கனவே சென்னை மழை வெள்ளம் குறித்து கோலிவுட் கலைஞர்களின் ஆதரவோடு ஒரு பாடலை இயக்கி அனுபவம் பெற்ற விக்ரம், தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் எடுக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் புனித் ராஜ்குமார் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

சிம்பு முன்ஜாமீன் வழக்கு. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கடந்த சில நாட்களாக தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது....

விஜய் நடிக்கவிருந்த படத்தில் ராகவா லாரன்ஸ்?

இளையதளபதி விஜய் தனது 59வது படமான 'தெறி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

'சிங்கம் 3' படத்தின் புதிய டைட்டில் அறிவிப்பு தேதி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்', சிங்கம் 2' ஆகிய வெற்றி படங்களை அடுத்து 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இவ்வாரம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

இணையத்தை கலக்கும் பார்த்திபனின் பீப் பாடல்

கடந்த சில நாட்களாக சிம்புவின் பீப் பாடல் தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதியதாக...

ஜனவரி 25-ல் வெளியாகிறது விஜய் ரசிகரின் படம்

அஜித், விஜய் ரசிகர் கேரக்டர்களில் பல கோலிவுட் நடிகர்கள் தங்கள் படங்களில் நடித்திருக்கும் நிலையில் மலையாள நடிகர் ஒருவர் விஜய்யின் ரசிகராக நடித்து வருகிறார்...