இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றி நடை போடும் 'விக்ரம் வேதா'

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூகவலைத்தளங்களின் ஆதரவு காரணமாக இந்த படம் முதல் வாரத்தில் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றதோடு, இரண்டாவது வாரத்திலும் வசூலில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் 21 திரையரங்குகளில் 280 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,42,16,251 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் இந்த படம் ரூ.4,71,75,854 வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த தொகை விஜய்சேதுபதி, மாதவன் ஆகிய இருவருக்குமே அவர்களது முந்தைய படங்களின் 10 நாள் வசூலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓவியாவை வெல்வாரா பிந்துமாதவி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதிய பங்கேற்பாளராக நடிகை பிந்துமாதவி களமிறங்கியுள்ளார்...

பிக்பாஸில் பிந்துமாதவி! ஓவியாவுக்கு இனிமேல்தான் போட்டியா?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து கொண்டு வருபவர்களிடம் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்டால் உடனே யோசிக்காமல் ஓவியாவின் பெயரை கூறி விடுவார்கள்...

இன்னும் பத்தே நாட்களில் முடியும் ஜி.வி.பிரகாஷ் படம்

கோலிவுட்திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவர் மட்டுமே...

சூப்பர் ஹிட் காமெடி படத்தின் 2ஆம் பாகத்தில் மிர்ச்சி சிவா

மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்ப்படம்' கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் பெரிய நடிகர் முதல் சின்ன நடிகர் வரை அனைத்து நடிகர்களின் படங்களையும் சிவா கலாய்த்திருப்பார்...

அஜித்துக்கும் தனுஷூக்கும் 15 நாட்கள் மட்டுமே வித்தியாசம்

தனுஷ் அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான' விஐபி 2' திரைப்படம் இந்த மாதமே வெளியாக இருந்த நிலையில் சென்சார் தாமதம் காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...