கனடா கல்லூரியில் விஜய்சேதுபதியின் வெற்றிப்படம்

  • IndiaGlitz, [Thursday,September 14 2017]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. அஜித்தின் 'விவேகம்' புயலில் கூட இந்த படம் தொடர்ந்து வசூலை குவித்து கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்

இந்த நிலையில் இந்த படம் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கனடா நாட்டில் உள்ள 'ரெட் டீர் கல்லூரியில் (Red Deer College) திரையிடப்படவுள்ளது. இந்த தகவல் 'விக்ரம் வேதா' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

தமிழ் திரைப்படங்கள் தொடர்ச்சியாக கனடா நாட்டில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் 'விக்ரம் வேதா' போன்ற படங்கள் அந்நாட்டு கல்லூரிகளில் திரையிடப்படுவது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பெருமையாகவே கருதப்படுகிறது.
 

More News

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித்தா? கமல்ஹாசனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதன்முதலாக பிகினி உடையில் பிரபல நடிகை

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்த வைத்த நடிகை டாப்சி, அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

'துப்பறிவாளன்' முதல் ஆரம்பமாகும் விஷாலின் 'ஒரு ரூபாய்' திட்டம்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று விவசாயிகளின் 'ஒரு ரூபாய்' திட்டம்.

அரியலூர் மாணவி ரங்கீலா விவகாரம்: விஜய் நற்பணி மன்றம் விளக்கம்

தளபதி விஜய் மாணவர்களின் கல்வி உள்பட பல்வேறு உதவிகளை விளம்பரம் இன்றி செய்து வருகிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும்

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால்: டி.ராஜேந்தரின் விறுவிறுப்பான பேட்டி

அரசியல் களத்தில் அவ்வப்போது புயலை கிளப்பிவிட்டு செல்லும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'நான் சொன்னதை சசிகலா கேட்டிருந்தால் இன்று அவர் குளுகுளு அறையில் இருந்திருப்பார்