கனடா கல்லூரியில் விஜய்சேதுபதியின் வெற்றிப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. அஜித்தின் 'விவேகம்' புயலில் கூட இந்த படம் தொடர்ந்து வசூலை குவித்து கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம்
இந்த நிலையில் இந்த படம் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கனடா நாட்டில் உள்ள 'ரெட் டீர் கல்லூரியில் (Red Deer College) திரையிடப்படவுள்ளது. இந்த தகவல் 'விக்ரம் வேதா' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
தமிழ் திரைப்படங்கள் தொடர்ச்சியாக கனடா நாட்டில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் 'விக்ரம் வேதா' போன்ற படங்கள் அந்நாட்டு கல்லூரிகளில் திரையிடப்படுவது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பெருமையாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com