'விக்ரம் வேதா' படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்சார் அதிகாரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
முதன்முதலாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.
'விக்ரம் வேதா' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். நாளை முதல் ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறை ஆவதால் தமிழக அரசின் வரிவிலக்கு இனி கிடைக்காது என்றாலும் 'ஏ' சான்றிதழால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படம் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் வசூல் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மறுதணிக்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் ஜூலை 7ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது மறுதணிக்கைக்கு செல்வதால் அதற்குள் மறுதணிக்கை பணிகள் முடிந்துவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். சாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout