'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் விரைவில் உருவாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பது தெரிந்ததே.

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் கேரக்டரில் சைப் அலி கானும் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் இந்தியிலும் இந்த படத்தை இயக்க இருக்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இந்தியாவிற்காக அமெரிக்காவில் நிதி திரட்டிய விஜய்பட நாயகி… நன்றி தெரிவித்து உருக்கம்!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தமிழன்”.

என்னிடம் கேட்டால் நான் பதில் தருகிறேன்” அமீர்கான் வதந்தி குறித்து பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் அமீர்கானும்

ஓடிடியில் நயன்தாராவின் அடுத்த படம்: ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கேக் வெட்டி கொண்டாடிய 'மாநாடு' படக்குழு: காரணம் இதுதான்!

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது

பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளை அருகில் அறுவை சிகிச்சை: உருக்கமான பதிவு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா என்பதும் அன்பு தான் ஜெயிக்கும் என்று உறுதியாக நம்பிய அவர் அன்பு குழுவின் தலைவியாக இருந்ததாகவும் பார்வையாளர்களால்