'விக்ரம் வேதா' இயக்குனரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’விக்ரம் வேதா’ என்பதும் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடித்து இருந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தையும் புஷ்கர் காயத்ரி இயக்குவதாகவும் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் கேரக்டர்களில் ஹிருத்திக்ரோஷன் மற்றும் சயிப் அலிகான் நடிப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வந்த நிலையில் அந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இதில் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய பகுதியின் காட்சிகளை நடித்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் அதில் சயீப் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் போலவே ஹிந்தியிலும் ’விக்ரம் வேதா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.