நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'விக்ரம் வேதா' இயக்குனர்களின் படைப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்த ’விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படைப்பு அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கிய ’விக்ரம் வேதா’ திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’வதந்தி’ என்ற வெப் சீரியல் அமேசான் ஓடிடியில் டிசம்பர் 2-ம் தேதி ரிலீசாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் க்ரைம் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த வெப்தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே ’லீலை’ ‘கொலைகாரன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ள ’வதந்தி’ வெப்சீரிஸ் குறித்த புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் எஸ்.ஏ. சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘டான்’, ‘மாநாடு’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் ’வதந்தி’ வெப்தொடரும் அவருக்கு மற்றுமொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Our next production on @PrimeVideoIN #Vadhandhi
— Pushkar&Gayatri (@PushkarGayatri) November 17, 2022
Created, Written & Directed by our super buddy @andrewxvasanth, starring the inimitable @iam_SJSuryah .This twisted crime thriller will make you binge! Big cheers to our wildly talented cast & crew! DEC2 release! @wallwatcherfilm pic.twitter.com/cYw6ywEX2N
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com