'காலா' படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் 'விசுவாசம்'

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெகுவிரைவில் மும்பையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வசனகர்த்தாவாக மணிகண்டன் இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'விக்ரம் வேதா' படத்திற்கு வசனம் எழுதியவர் என்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் ரஜினியின் மகனான லெனின் என்ற கேரக்டரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 'காலா' படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த 'சாக்சி அகர்வால், இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும்நிலையில் தற்போது இந்த படத்தில் மணிகண்டனும் இணைந்துள்ளார்.

'விக்ரம் வேதா' படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த படத்தின் வசனம் என்பதால் 'விசுவாசம்' படத்திலும் மணிகண்டனின் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விசுவாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகள்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் பாக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது போலவே

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு 

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அதன் பின்னர் 'சோலோ' மற்றும் 'நடிகையர் திலகம்

ஸ்டாலின் முதல்வராக ஆதரவு கொடுத்த பிரபல நடிகர்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கூறி வரும் நிலையில் திரையுலகில் சிலரும் திமுகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களில் நடிகர்களாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ். அந்த வரிசையில் கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் நடிகராகவும்,