close
Choose your channels

'காலா' படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் 'விசுவாசம்'

Friday, June 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெகுவிரைவில் மும்பையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வசனகர்த்தாவாக மணிகண்டன் இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'விக்ரம் வேதா' படத்திற்கு வசனம் எழுதியவர் என்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் ரஜினியின் மகனான லெனின் என்ற கேரக்டரில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 'காலா' படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த 'சாக்சி அகர்வால், இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும்நிலையில் தற்போது இந்த படத்தில் மணிகண்டனும் இணைந்துள்ளார்.

'விக்ரம் வேதா' படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த படத்தின் வசனம் என்பதால் 'விசுவாசம்' படத்திலும் மணிகண்டனின் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விசுவாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment