'என்னை யாராவது கிள்ளுங்கள்”: லைகா டுவிட்டுக்கு விக்ரம் அளித்த பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொன்னியின் செல்வன்’ குறித்து லைகா நிறுவனம் பதிவு செய்த டுவிட்டுக்கு ‘என்னை யாராவது கிள்ளி இனி கனவல்ல என்று சொல்லுங்கள் என நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்றுடன் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிறது என்று லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் 50 நாளில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த நடிகர் விக்ரம், ‘என்னை யாராவது கிள்ளி, இது கனவல்ல என்று கூறுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். லைகா மற்றும் விக்ரமின் இந்த டுவிட்டுக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Somebody pls pinch me.. & tell me this is not a dream. #PonniyinSelvan pic.twitter.com/zZ7BhAm1HF
— Vikram (@chiyaan) November 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments