சென்னை, மதுரை, கோவை என திடீர் சுற்றுப்பயணம் செய்யும் நடிகர் விக்ரம்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 22 2022]

சென்னை, மதுரை, கோவை உள்பட பல பகுதிகளுக்கு திடீரென நடிகர் விக்ரம் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’கோப்ரா’. இந்த படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பதும், குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை புரமோஷன் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் நடிகர் விக்ரம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி மதுரை மற்றும் திருச்சி, ஆகஸ்ட் 24ஆம் தேதி கோவைக்கு சுற்றுப்பயணம் செய்யும் விக்ரம், ஆகஸ்டு 25ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

அதன்பிறகு ஆகஸ்டு 26-ஆம் தேதி கொச்சி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பெங்களூரு மற்றும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கும் சென்று ’கோப்ரா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.