மருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் வீடியோ வெளியிட்டாரா விக்ரம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவிய நிலையில் அவரது மகன் துருவ் விக்ரம் மற்றும் அவரது மேனேஜர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என்றும் லேசான நெஞ்சுவலி தான் என்றும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் விளக்கமளித்தனர்.
இந்தநிலையில் சியான் விக்ரம் பூரண குணமாகி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் விக்ரம் டிஸ்சார்ஜ் ஆனவுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக கூறி ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ விக்ரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் வெளியிட்ட வீடியோ இல்லை என்றும், கடந்த 2017ஆம் ஆண்டு ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்தபோது அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments