22 வருடம் கழித்து சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகமா? நடிகர் விக்ரம் மாஸ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சியான் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு அவர் 22 ஆண்டுகளுக்கு முன் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான விக்ரம் , ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ‘சியான் 62’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ’சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
மேலும் இந்த படத்தில் விக்ரமுடன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் நடிக்க உள்ளனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில் ஷிபுதமின்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் ‘ஓ போட’ மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ’ஜெமினி’ படத்தின் இரண்டாம் பாகங்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’இன்னும் சில தினங்களில்’ இந்த படத்தின் அறிவிப்பு வரும் என்று விக்ரம் கூறியுள்ள நிலையில் அந்த அறிவிப்பு ’ஜெமினி 2’ பட அறிவிப்பாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மிக்க நன்றி.. for all the love pouring in today. Interesting updates .. இன்னும் சில தினங்களில்.
— Vikram (@chiyaan) April 12, 2024
Any guesses??
& don’t forget to ஓ போடு!! ❤️ pic.twitter.com/3wtq8Yrfbv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com