எனது வாய்ப்புகளை ஒருவன் தடுத்தான்.. பச்சை துரோகி. நடிகர் குறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் ஒருவரை பச்சை துரோகி என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'மதயானை கூட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்ரம் சுகுமாரன், அதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து, சாந்தனு நடித்த ’ராவண கூட்டம்’ என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: "மதயானை கூட்டம் திரைப்படம் இயக்கிய பிறகு எனக்கு வேறு பட வாய்ப்புகள் வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல, அவனை நான் தான் நடிகன் ஆக்கினேன், பச்சை துரோகி, கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டு இருக்கிறான். இதனை கேட்டதில் இருந்து ஆண்டவன் மீது ஆத்திரம் வருகிறது. ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை" என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் குறிப்பிட்டுள்ள அந்த நடிகர் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout