விக்ரம் மகன் துருவ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் நேற்று மாலை அறிவிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணத்தை அடுத்து இந்த அறிவிப்பு இன்று அறிவிக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'வர்மா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. வித்தியாசமான 'பாலா'வின் டச்சில் உள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.