எவ்வளவு அழகாக பாடுகிறார் சியான் விக்ரம், ரசித்து கேட்கும் த்ரிஷா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,October 02 2022]

சியான் விக்ரம் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர் தான் நடித்த படங்களில் மட்டுமின்றி வேறு சில நடிகர்கள் நடித்த படங்களிலும் பாடல் பாடியுள்ளார். ‘ஜெமினி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு’, ‘கந்தசமை’ படத்தில் இடம்பெற்ற ‘எக்ஸ்கியூஸ் மி’ பாடல்’, ’மதராச பட்டணம்’ படத்தில் இடம்பெற்ற ’மேகமே ஓ மேகமே’ உள்பட பல பாடல்கள் விக்ரம் பாடியுள்ளார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் புரமோஷன் விழாவின் போது அவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் கம்போஸ் செய்த ’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ என்ற பாடலை மிக அழகாகப் பாடினார்.

விக்ரம் இந்த பாடலை பாடும் அழகை த்ரிஷா அருகில் உட்கார்ந்திருந்து ரசிக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகர் விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், இதனையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் ‘மைதானம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.