சென்னை இயக்குனராக மாறிய சீயான் விக்ரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக நகருக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது என்பதை அறிந்தோம். இந்த துயரமான நிகழ்ச்சியிலும் ஒரு நன்மை கிடைத்துள்ளது. வெள்ள நிவாரண பணிக்காக பலர் தாமாகவே முன்வந்தததும், அனைத்து துறையை சேர்ந்தவர்களும் கொடை வள்ளலாக மாறியதையும் பார்த்தோம்.
குறிப்பாக திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியது மட்டுமின்றி தாங்கள் ஒரு பெரிய ஸ்டார் என்ற இமேஜையும் மறந்து மக்களோடு மக்களாக இறங்கி வந்து நிவாரண உதவியை செய்ததை பல செய்திகளில் பார்த்தோம்/
இந்நிலையில் சென்னை வெள்ள நிவாரண பணி குறித்த வீடியோ பாடல் ஒன்றை சீயான் விக்ரம் தயாரிக்கவுள்ளார். அவரே இயக்கும் இந்த வீடியோவுக்கான படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த வீடியோ பாடலில் கோலிவுட் பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். விரைவில் இந்த பாடல் உருவாக்கப்பட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் விரைவில் 'அரிமாநம்பி' இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com