close
Choose your channels

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? 'PS 2' புரமோஷன் விழாவில் விக்ரம் விளக்கம்..!

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் ஏற்கனவே இந்த படத்திற்கு முன்பதிவு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் விழாவில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த நடிகர் விக்ரம், கமல்ஹாசன் படத்தில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் இருந்து ’பொன்னியின் செல்வன்’ உரிமையை கமல்ஹாசன் பெற்ற பிறகு தன்னை அவர் அழைத்ததாகவும் ’பொன்னியின் செல்வன்’ நாவலை தொலைக்காட்சி தொடராக எடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் எந்த கேரக்டர் வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து நடிக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் ’பொன்னின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுத்தால் எந்த கேரக்டரிலும் தான் நடிக்க தயார் என்றும் கூறியதாக விக்ரம் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் ’பொன்னியின் செல்வன்’ கதையின் எந்த ஒரு கேரக்டரையும் நான் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற சுதந்திரம் எனக்கு கமல்ஹாசன் கொடுத்ததற்கு தான் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் ரூபாய் 500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்ததை அடுத்து அதை விட மிக அதிகமாக இரண்டாம் பாகம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.