close
Choose your channels

நாமினேஷனில் இருந்து விஷ்ணு தப்பிப்பது இப்படித்தான்.. சரவணன் விக்ரமின் மெகா கண்டுபிடிப்பு..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் அதிகம் நாமினேஷன் செய்யப்படாத போட்டியாளர்களில் ஒருவர் விஷ்ணு என்பது தெரிந்ததே. அவர் இரண்டாவது வாரம் மற்றும் மூன்றாவது வாரம் மட்டுமே நாமினேஷன் செய்யப்பட்டார் என்பதும் கடந்த மூன்று வாரங்களாக அவர் நாமினேஷன் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு ஏன் நாமினேஷன் செய்யப்படவில்லை என்பது குறித்து தனது மெகா கண்டுபிடிப்பை விக்ரம் சரவணன் பூர்ணிமாவிடம் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஷ்ணு வாரம் முழுவதும் மற்றவர்களிடம் சண்டை போடுவார், ஆனால் நாமினேஷன் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தனது குரலை குறைத்துக் கொள்வார். இணக்கமாக நடந்து கொள்வார், அப்படி இருந்தால் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்பதுதான் அவரது எண்ணம். இது இந்த வாரம் மட்டும் இல்ல, முதல் வாரத்தில் இருந்து அப்படி தான் செய்து கொண்டிருக்கிறார் என்று சரவணன் விக்ரம் கூறுகிறார்

அதற்கு பூர்ணிமா ‘இதெல்லாம் தப்பு இல்லையா’ என்றபோது, ‘அவருடைய கேமே இதுதான், அதுதான் அவருடைய பிளஸ் என்று கூறினார். இதனை அடுத்த பூர்ணிமா ’விஷ்ணு பற்றி சரியாக புரிந்து வைத்த ஒரே நபர் நீதான்’ என்று கூற சரவணன் விக்ரம் தனக்குத்தானே பெருமையுடன் சிரித்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment