உங்கள் கனவும் ஒருநாள் நனவாகும்: வாழ்த்து கூறிய நடிகருக்கு விக்ரம் சொன்ன பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரமுக்கும் பாராட்டு தெரிவித்த தமிழ் நடிகர் ஒருவருக்கு ’ஒருநாள் உங்கள் கனவும் நனவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று கேரளாவில் படக்குழுவினர் புரோமோஷன் செய்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரமை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் தமிழ் நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் நடிகராக வேண்டும் என்று கனவு காண தொடங்கிய நாளிலிருந்தே குதிரையில் சவாரி செய்யும் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம் குதிரையில் சவாரி செய்வதை பார்த்தபோது நானே அதில் சவாரி செய்வது போன்றும் என் கனவு நனவானது போன்றும் உணர்ந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விக்ரம், ‘நன்றிகள் பல ஆயிரம் நண்பா. நீங்களும் விரைவில் அந்த கனவில் சவாரி செய்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
நன்றிகள் பல ஆயிரம் நண்பா. I know you too will ride that dream some day soon.
— Aditha Karikalan (@chiyaan) September 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com