தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பண்ணாதீங்க.. விக்ரம் சரவணன் சகோதரி வேண்டுகோள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரம் சரவணனின் சகோதரி தனது அண்ணன் குறித்து தவறான தகவல்களை குறிப்பிட்டு கிண்டல் செய்யாதீர்கள் என வேண்டுகோள் எடுத்துள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரம் சரவணன் ஆரம்பத்தில் நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார். குறிப்பாக அவர் கேப்டனாக இருந்தபோது பிக் பாஸ் வீடு நல்ல நிலையில் தான் இருந்தது. ஆனால் போகப்போக அவர் ஒரு காமெடி பீஸ் ஆக மாறிவிட்டார்.
குறிப்பாக என்னுடைய பேன்ஸை நான் மிஸ் செய்கிறேன் என்று அவர் கூறிய போது பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். அதுமட்டுமின்றி நான் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று அவர் தனக்குத்தானே கற்பனை செய்து கொண்ட காட்சிகளும் கிண்டலுக்கு உள்ளானது. மேலும் பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியே அவரை கிண்டல் அடிக்கும் சில நிகழ்வுகள் நடந்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் விக்ரம் சரவணன் சகோதரி தனது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகியபோது அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தது உண்மைதான், அவரது ரசிகர்கள் கிட்ட இருந்து நிறைய மெசேஜ்கள் வரும். எனவே அவருக்கு ரசிகர்கள் இல்லாதது போல் அவரை கேலி கிண்டல் செய்ய வேண்டாம்..
எனது அண்ணன் மட்டுமல்ல, எந்த ஒரு போட்டியாளரையும் முடிந்தால் பாசிட்டிவாக கமெண்ட் செய்யுங்கள் அல்லது விட்டுவிடுங்கள், தேவையில்லாமல் இல்லாத ஒன்றை நெகடிவ் உருவாக்கி பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
#SaravanaVickram Sister requests to not spead fake things about this brother and others too.
— Ahamed Inshaf (@InshafInzz) November 18, 2023
She told, #Vickram has a fanbase from Pandian Stores.
What's ur opinion on this?
My opinion:
No comments😁#BiggBossTamil #BiggbossTamil7#BiggBoss7Tamilpic.twitter.com/aNKzLv2ma8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments