டைட்டில் வின்னர் என டைப் அடிச்சா என் பேரு தான் வருது.. வெளியே வந்தும் திருந்தாத விக்ரம் சரவணன்..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

கூகுளில் டைட்டில் வின்னர் என டைப் அடித்தால் என்னுடைய பெயர் தான் வருகிறது என இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள விக்ரம் சரவணன் கூறி இருப்பதை பார்வையாளர்கள் கேலியும் கிண்டலும் செய்து வெளியே வந்தும் திருந்த வில்லையா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக விக்ரம் சரவணன் இருந்தபோது நள்ளிரவில் தனியாக ’நான்தான் டைட்டில் வின்னர்’ என பேசியது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. பல நெட்டிசன் தங்களது சமூக வலைதளங்களில் விக்ரம் சரவணன் தான் டைட்டில் வின்னர் என கேலியாக பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள விக்ரம் சரவணன், மாயாவிடம் ’டைட்டில் வின்னர் என கூகுளில் டைப் அடித்தால் என்னுடைய பெயர் தான் வருகிறது’ என்று கூற மாயா பயங்கரமாக சிரிக்கிறார்.

மேலும் நாம் சரியாகத்தான் விளையாடி இருக்கிறோம், ஆனால் மணி தான் சீண்டி இருக்கிறான், நம்ம அவங்களை புரிஞ்சிக்கிறது வேற மாதிரி இருக்கு, ஆனா மக்கள் பார்க்கிறது வேற மாதிரி இருக்கு’ என்று மாயாவிடம் கூறுகிறார்

இந்த நிலையில் விஷ்ணு மற்றும் அவரது குழுவினர்கள் ’கூல் அண்ணன் வந்தால் தான் நமக்கு ஜாலியாக இருக்கும், இவங்க யாருமே நம்மிடம் பேச மாட்டேங்கறாங்க’ என்று புலம்பி கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது.