இவனுக்கெல்லாம் எதுக்கு ஃபைவ் ஸ்டார்.. சொன்னது யாருன்னு விக்ரமிடம் போட்டு கொடுத்த உறவினர்..!

  • IndiaGlitz, [Thursday,December 21 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு இல்லை. அதற்கு மாறாக சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வெளியில் இருந்து வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் மறைமுகமாக சில விஷயங்களை போட்டியாளர்களுக்கு சொல்லித் தருகின்றனர் என்பதும் அதன் பிறகு சில போட்டியாளர்கள் சுதாரித்து விளையாடி வருவதையும் பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்று விக்ரமின் உறவினர்கள் வருகின்றனர். விக்ரமின் உறவினர் அவரை தனியாக அழைத்து சில விஷயங்களை சொல்கிறார். அதில் ’பூர்ணிமாவது பரவாயில்லை, ஆனால் மாயாவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. உனக்கு பைவ் ஸ்டார் கிடைத்ததில் யாருக்கெல்லாம் சந்தோஷம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறாய்? இவனுக்கெல்லாம் எதுக்கு பைவ் ஸ்டார் கொடுத்தீங்க என்றுதான் சொன்னார்கள்? என்று கூறுகிறார்

மேலும் உன்னுடைய கேமை நீ தனியாக விளையாடு, போனதுக்கு அப்புறம் தனியா அப்படி உட்கார்ந்து யோசிக்கிறது, அங்க போயிட்டு என் தங்கச்சிய ஏதாவது சொல்லியிருந்தா, தப்பா எடுத்துக்கிடாதீங்க, அது எதுவுமே வேண்டாம், என்றெல்லாம் சொல்லாதே’ என்று கூறினார். மொத்தத்தில் விக்ரமின் உறவினர்களை வருகைக்கு பின்னர் அவரது விளையாட்டு இனிமேல் மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.