விக்ரம்பிரபுவின் 'வாஹா' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 02 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலக வாரிசும், வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகருமான விக்ரம்பிரபு நடித்து முடித்துள்ள 'வாஹா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்ட ராணுவம் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் ரான்யா ராவ், துளசி, கருனாஸ், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்சாரின்போது இந்த படத்தை பார்த்த ராணுவ அதிகாரிகள் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் சென்சார் ஆகிவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை காஸ்மோ சிவா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானத்துடன் இணையும் பிரபல வெற்றி பட இயக்குனர்

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படம் 'எந்திரன்' என்ற மிகப்பெரிய சுனாமியை சமாளித்து வசூலை அள்ளிய படம்...

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'சங்கமித்ரா' திரைப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளது...

ஹன்சிகாவை அடுத்து சி.வி.குமாருடன் இணைந்த சூர்யா

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார்...

மலேசியாவில் 'கபாலி' செய்த முதல் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது...

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட சூர்யா-கவுதம் மேனன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த 'காக்க காக்க 'திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு...