close
Choose your channels

விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி' ரிலீஸ் தேதி

Wednesday, August 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம்பிரபு நடித்த 'வாஹா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவர் நடித்த முந்தைய படமான 'இது என்ன மாயம்' படமும் தோல்விப்படமாக அமைந்த நிலையில் அவர் தற்போது நம்பியிருப்பது 'வீரசிவாஜி' என்ற படத்தினை மட்டும்தான்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படம் விக்ரம்பிரபுவுக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம்பிரபு, ஷாமிலி, பேபி சாதன்யா, ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment