விக்ரம் பிரபுவின் 'வீரசிவாஜி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,December 03 2016]

விக்ரம்பிரபு நடித்த 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்துள்ள 'வீரசிவாஜி' திரைப்படம் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
விக்ரம்பிரபு, ஷாம்லி முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை கணெஷ் விநாயக் இயக்கியுள்ளார்.

More News

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில் என்ன?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் முதன்முதலில் இணைந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று...

வங்கி வாசலில் வரிசையில் நின்ற தாயின் ஒரு மாத குழந்தை மரணம்

மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கள்ளநோட்டு மற்றும் கருப்புப்பணம் ஓரளவு ஒழிந்து கொண்டிருந்தாலும்...

பிரபல பெண் நடன இயக்குனர் படத்தில் தனுஷ்

கோலிவுட் திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம்...

பாலிவுட்டில் நுழைய அட்ஜெஸ்ட் செய்தது உண்மைதான். சன்னிலியோன்

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆப் ஒன்றை வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.13,860 கோடி கருப்புப்பணம். அதிர்ச்சி தகவல்

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய...