விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு': அதிரடி ஆக்சன் படத்தின் டீசர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் பிரபு நடித்த ’டாணாக்காரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த திரைப்படமான ’பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிரடி ஆக்சன் படங்களை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வ்ரும் விக்ரம் பிரபு மற்றொரு ஆக்சன் படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். சற்று முன் வெளியான இந்த டீசரின் ஒரு நிமிட காட்சியும் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளே உள்ளதால் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்செயா, விவேக் பிரசன்னா உள்படபலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்கியுள்ளார். சாகர் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s a film to look forward to guys. Happy to present you all the edgy teaser of @iamvikramprabhu's #PaayumOliNeeYenakku !https://t.co/cqMaGNdxwu@vanibhojanoffl @Dhananjayaka @KarthikFilmaker @kmh_productions #PONY
— Actor Karthi (@Karthi_Offl) June 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments