தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க: நோபால் சர்ச்சை குறித்து பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் ஒரு அம்பயர் நோபால் கொடுக்க, இன்னொரு அம்பயர் நோபால் இல்லை என்று கூறியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து மைதானத்திற்குள் வந்த தோனி, அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அவருக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக், தோனியை இரண்டு அல்லது மூன்று போட்டிகள் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விக்ரம்பிரபு தனது சமூக வலைத்தளத்தில், 'தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க. அப்ப யாரை விட்டு வைப்பாங்க? தவறு செய்ததற்கான அத்தாட்சியாக காணொலி இருக்கிறது. அது போதாது. ஆனால் அந்தத் தவறைத் தட்டிக் கேட்ட விதம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் இந்த ஒட்டுமொத்த அமைப்புமே தவறில்லையா? எனது தலைவனை (இந்தியா/சிஎஸ்கே) விட்டுவிடுங்கள். ஒரு விளையாட்டை, நாட்டை இதை வைத்து மதிப்பிடாதீர்கள். எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றனர்'' என்று விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
Spare a thought!#Csk#Dhoni#India
— Vikram Prabhu (@iamVikramPrabhu) April 14, 2019
Basic!!!!✌️?????? pic.twitter.com/iI8wyuAGyG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments