சிட்டியில என்னை தவிர வேற எந்த ரவுடியும் இருக்கக்கூடாது: விக்ரம் பிரபுவின் 'ரெய்டு' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் பிரபு நடித்த ‘ரெய்டு’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காவல்துறை அதிகாரியாக விக்ரம் பிரபு நடித்திருக்கும் இந்த படத்தில் அவர் ரவுடியை போலவே கொலை செய்கிறார், ஆனால் அவர் கொலை செய்வது எல்லாமே ரவுடிகள். மேலதிகாரி சொன்னாலும் கேட்பதில்லை, அவருக்கென்று ஒரு ரூல்ஸ் வைத்துக்கொண்டு அவர் ரவுடிகளை களை எடுக்கும் போது, அவருக்கு ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சினை, அந்த பிரச்சனையை அவர் எப்படி தீர்க்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
இந்த உலகத்துல பொண்ணு, பெண்ணு, மண்ணு இத பத்தி கதை கேட்டு இருப்பீங்க, இப்ப பிரசண்ட்ல ஒரு விஷயம் நடந்துகிட்டு இருக்கு, இதுல அரசியல்வாதி ங்க, அதிகாரிங்க, ரவுடிங்க, போலீஸ்காரங்க யாருமே சொன்னாலும் கேட்க மாட்டாங்க,
அவன் போலீஸ்காரன் என்று யார்ரா சொன்னது, நம்மள மாதிரி ஒரு கூலிப்படை தான்,நாம காசு வாங்கிட்டு கொலை பண்றோம், அவன் காக்கி சட்டை போட்டு கொலை பண்றான்
அவன் போட்டிருக்கிறது என்ன கர்ணனோட கவச குண்டலமா, நான் குத்தினாலும் அவன் மேல கத்தி இறங்கும். வலின்னா என்னன்னு, உசுருன்னா என்னன்னு காட்றேன்’ போன்ற வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது
விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தர்ராஜன் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் கதிரவன் ஒளிப்பதிவில் மணிமாறன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விக்ரம் பிரபுவுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com