விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,September 10 2016]

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'வீரசிவாஜி' ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து 'யூ' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெறும் தகுதியை பெற்றுள்ளது.

விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் முதல்முறையாக நாயகியாக அறிமுகமாகிறார் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி. இவர் ஏற்கனவே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் விக்ரம்பிரபு, ஷாமிலி, பேபி சாதன்யா, ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.