ரஜினி, விஜய் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விக்ரம்பிரபு

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

நடிகர் விக்ரம்பிரபு நடித்த 'நெருப்புடா' திரைப்படம் இந்த வாரம் வெள்ளியன்று வெள்ளித்திரையில் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியின் 'கபாலி', விஜய்யின் 'தெறி' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்சன் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'கத்திக்கப்பல்', 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை' போன்ற படங்களை இயக்கியவர்

இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து விக்ரம்பிரபு கூறுகையில், 'அரிமாநம்பி' போன்ற படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று பலர் என்னிடம் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு பதிலாக இந்த படம் இருக்கும். மேலும் இந்த படத்தின் கதை அனைத்து தரப்பினர்களுக்கும் குறிப்பாக 'பி' மற்றும் 'சி' ஆடியன்ஸ்களுக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என்று கூறினார்.

'அரிமா நம்பி' படத்திற்கு பின்னர் தாணுவின் தயாரிப்பில் விக்ரம்பிரபு நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம். மறந்துவிடாதீர்கள் மக்களே

தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது...

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை: பெங்களூரில் பரபரப்பு

லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்த கவுரி நேற்று மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்...

1186 மார்க் எடுத்த மாணவரின் தந்தையை அடித்து நொறுக்கிய பாஜகவினர்

முன்பெல்லாம் குறைந்த மார்க் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வார்கள்...

சிறைக்கு வெளியே வந்தார் குண்டர் சட்டத்தின் குரல்வளையை நெறித்த வளர்மதி

கதிராமங்கலம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதிஉத்தரவிட்டது..

பாரதிராஜா தலைமையில் நடந்த 'களவாணி' நடிகரின் திருமணம்

விமல், ஓவியா நடித்த 'களவாணி' படத்தில் யதார்த்தமான வில்லனாக அறிமுகமான திருமுருகன்,