விக்ரம்பிரபு அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: நாயகி இவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய திரைப் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு ‘ரெய்டு’ என்று டைட்டில் வைக்கப்பட்டு, பர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் விக்ரம்பிரபு வாளை கையில் வைத்து கொண்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார் என்பதும், இயக்குனர் முத்தையா வசனம் எழுதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம் சிஎஸ் இசையில், கதிரவன் ஒளிப்பதிவில், மணிமாறன் படத்தொகுப்பில், வீரமணி கணேசன் கலை இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை கணேஷ் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.
Here is @iamVikramPrabhu's next #RAID.#RaidFirstLook @SDsridivya @dir_muthaiya @Directorkarth17 @OpenScreenoffl @SamCSmusic @Ananthika108 @Kathiravan7384 @kanishk_offl @vinoth_offl @guruboopathy14 pic.twitter.com/K2PwTOMAIq
— Diamond Babu (@idiamondbabu) July 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com