விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் பிரபு நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்ரியன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ஆகிய பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெற தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் வெகுவிரைவில் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இசைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் சூர்யா

தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா, நடிப்பு மட்டுமின்றி 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த '36 வயதினிலே', 'பசங்க 2' ஆகிய இரண்டு தரமான படங்களாகவும், '24' திரைப்படம் மாஸ் படமாகவும் அமைந்தது...

மீனவர் பலி விவகாரம். தமிழர்களை கேவலப்படுத்தும் சுவாமி

இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு காரணமாக பலியான சோகத்தில் மீனவர்களும் தமிழக மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் இன்னொரு புறம் பாரதிய ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சை

'மாநகரம்' படம் பார்க்கலாமா?

2015ல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘மாயா’ படத்தைத் தொடர்ந்து , ‘Potential Studios' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மாநகரம்’. ..

மீனவன் உயிரின் மதிப்பு ரூ.5 லட்சம் தானா? இன்னொரு உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை தேவை!

 இன்று அதிகாலை பிரிட்டோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரூ.10 கோடி மோசடி செய்த பிரபல நகைச்சுவை நடிகர் கைது

ரூ.10 கோடி கொடுத்தால் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.