அதிகாரியாக இருந்தாலும் கேள்வி கேட்பேன்: விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' டீசர்

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசரில் தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கு சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு போலீஸ்காரராக யார் உருவாக வேண்டும் என்பதை போலீஸ் ட்ரெய்னிங்கில் உள்ள அதிகாரி தான் முடிவு செய்வார் என்பதால் போலீஸ் பயிற்சி பள்ளியில் என்னென்ன முறைகேடுகள் நடக்கின்றன, என்னென்ன அராஜகங்கள் நடக்கின்றன என்பதை விலாவாரியாக கூறியிருக்கும் படம்தான் இந்த ‘டாணாக்காரன்’. போட்டிக்காக மட்டுமே பயிற்சி கொடுக்கின்ற இந்த அதிகாரிகளை நான் கேள்வி கேட்பேன் என்று விக்ரம் பிரபுவின் வசனமே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொட்டன்ஷியல் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

பாய்ஸ் ஹாஸ்டலில் புகுந்து விளையாடும் ப்ரியா பவானிசங்கர்: ‘ஹாஸ்டல்’ டீசர்!

அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர், சதீஷ் உள்பட பலர் நடித்த 'ஹாஸ்டல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த

சீனுராமசாமியின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி, 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே. மேலும் 'நீர்பறவை

அட்டகாசமான 'வாடிவாசல்' டைட்டில் லுக்! சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் டைட்டில்லுக் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்

மது பழக்கத்தால் ஒரே ஆண்டில் 8 லட்சம் பேருக்குப் புற்றுநோய்? பகீர் தகவல்!

கொரோனா நேரத்தில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தன.

12ஆம் வகுப்பு மதிப்பெண் வெளியிடும் தேதி: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி கடந்த சில வாரங்களாக