close
Choose your channels

பொங்கல் ரிலீஸ் போட்டியில் இணைந்த மேலும் ஒரு படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Saturday, January 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’, சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ’பூமி’ ஆகிய மூன்று திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’திரைப்படமும் நடிகர் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படமும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படங்களை வரவேற்க ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாளில் ஓடிடியில் வெளியாகிறது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கிய ’புலிக்குட்டி பாண்டி’ என்ற திரைப்படமும் பொங்கல் விருந்தாக சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ’புலிக்குட்டி பாண்டி’ திரைப்படம் வெளியாகும் என்றும் சன் டிவியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது என்பதும் இந்த படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவதற்காகவே சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ரகுநாதன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment