சிங்கம், புலி, நரி, நாய் முகமூடியை போலீஸ்ல்ல கொடுத்துருவாங்க: 'டாணாக்காரன்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போலீஸ் ட்ரைனிங் போது ட்ரெய்னிங்கில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் விளைவுகள், ட்ரெய்னிங் கொடுப்பவர்கள் கொடுக்கும் இம்சைகள், அதையும் மீறி போலீஸ் என்ற கனவை நோக்கி செல்லும் இளைஞர்கள் குறித்த காட்சிகள் என்ற இரண்டு நிமிட ட்ரெய்லரில் உள்ளது. இந்த டிரைலரில் சிங்கம், புலி, நரி, நாய் முகமூடியை போலீஸ்ல்ல கொடுத்துருவாங்க’ என்ற ஒரு வசனம் படத்தின் ஒட்டுமொத்த கதையை சூசகமாக விளக்குகிறது.
ஒரு கட்டத்தில் ட்ரெய்னிங் கொடுப்பவர்களுக்கும், டிரைனிங்கிற்கு வந்தவர்களுக்கும் ஏற்படும் மோதல், அதனால் என்ன விளைவு ஏற்பட்டது என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ள இந்த படம் விக்ரம் பிரபுவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் பிரபு ,அஞ்சலி நாயர், லால், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை தமிழ் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Some stories wait to be told at a particular time. This one seems like that. Feeling very happy to share the trailer of #Taanakkaran#TaanakkaranTrailer- https://t.co/oelZpZV06w@iamVikramPrabhu @ianjalinair @directortamil77 @prabhu_sr @disneyplusHSTam#TaanakkaranFromApril8th
— Actor Karthi (@Karthi_Offl) March 31, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com