விக்ரமின் ‘தங்கலான்’ டிஜிட்டல் உரிமை வியாபாரம் இத்தனை கோடியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘தங்கலான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலேயே இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
‘தங்கலான்’ படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூபாய் 35 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோலார் தங்க வயலை பின்னணியாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com