போட்றா வெடிய.. 'தங்கலான்' ரிலீஸ் தேதி இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீஸ்க்கு தயாரானதாக கூறப்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தல், ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் ஏராளமான கிராபிக்ஸ் பணிகளும் தாமதமானதால் ரிலீஸ் தேதி தாமதமானது என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ்-க்கு தயாராகி விட்டது என்று கூறப்பட்ட நிலையில் ட்ரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் ‘போட்றா வெடிய’ என உற்சாகமாக உள்ளனர்.
விக்ரம் ஹீரோவாக நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு பின் ’தங்கலான்’ திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்கள் ரிலீஸ் ஆனாலும் தனி ஹீரோவாக நடித்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ’தங்கலான்’ திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.
The #Thangalaan storm is set to strike like a spear - strong and fierce 🌋🔥
— Studio Green (@StudioGreen2) July 19, 2024
A tale of blood, gold, and glory awaits.#ThangalaanFromAug15 - Releasing Worldwide. @Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @gvprakash… pic.twitter.com/z5vf7U2acy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments